மேலும் செய்திகள்
நெமிலி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
3 minutes ago
உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்
11 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட, சிவாலயம் என அழைக்கப்படும் ஆன்மிக அருங்காட்சியகத்தை, காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை களக்காட்டூரில், காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில், சிவாலயம் என அழைக்கப்படும் ஆன்மிக அருங்காட்சியம் இரண்டு அடுக்குகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு 12 ஜோதிர்லிங்கம், சகஸ்ரலிங்க கோடி லிங்கம், சொர்க்கத்தின் தத்ரூப காட்சி, ராஜயோக தியான படவிளக்க கண்காட்சி, ஒளி - ஒலி அலங்காரம், ராஜயோக தியான அறை, ஆன்மிக புத்தக கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகளின் வெள்ளி விழா நிகழ்ச்சியாக புதிய சிவாலயம் திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் பி.அகிலா வரவேற்றார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், தமிழ்நாடு, தென் கேரளம், புதுச்சேரி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிவாலயத்தை திறந்து வைத்து வழங்கிய ஆசியுரை: நல்ல சிந்தனை, உணவு, உடற்பயிற்சி, ஆசனங்கள், யோகாசனங்கள், இவை எல் லாம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றன. மூலம் நட்சத்திரத்தில், நம் காஞ்சி பெரியவர் மவுன விரதம் மேற்கொள்வது வழக்கம். எந்த பெரிய வி.ஐ.பி., வந்தாலும்கூட, மூல நட்சத்திர தினத்தன்று அவர் மவுனத்தை விடமாட்டார். மூல நட்சத்திர தினத்தன்று நாம் ஐந்து - நிமிடமாவது மவுனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி, களக்காட்டூர் ஊராட்சி தலைவர் நளினி, துணைத் தலைவர் பாலாஜி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி சகிலா ராஜி, காலுார் ஊராட்சி தலைவர் சகுந்தலா உட்பட பலர் பங்கேற்றனர்.
3 minutes ago
11 minutes ago