உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் - சென்னை ஏசி பேருந்து சேவை துவக்கம்

காஞ்சிபுரம் - சென்னை ஏசி பேருந்து சேவை துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு, 'ஏசி' பேருந்து சேவை துவங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவு பேருந்து சேவை, காலை முதல் இரவு வரை உள்ளது. ஆனால், 'ஏசி' பேருந்து சேவை இல்லை. இந்நிலையில் ஏசி பேருந்து சேவையை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் நான்கு முறை சென்று வர உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, காலை 5:20, 9:20, பகல் 1:20; மாலை 5:20 மணிக்கு புறப்படும். அதேபோல், சென்னையில் இருந்து காலை 7:15, 11:15, பகல் 3:30; இரவு 7:30 மணி என நான்கு முறை காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட உள்ளது. பேருந்து கட்டணமாக 85 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ