உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சென்னை: பல்வேறு இடங்களில் பரவலாக மழை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சென்னை: பல்வேறு இடங்களில் பரவலாக மழை

அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும்

உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 'அம்மா' பூங்கா உள்ளது. இந்த பூங்காவை, அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். தற்போது, பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து, பொதுமக்கள் அமரும் இடம் சேதமடைந்து உள்ளது.இங்குள்ள உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இல்லாமல், உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.எனவே, 'அம்மா' பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-- டி.எஸ்.அறிவழகன்.திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ