காஞ்சிபுரம்: புகார் பெட்டி:சேதமான வடிகால்வாய் தளம்
சேதமான வடிகால்வாய் தளம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் ஒட்டியுள்ள லிங்கப்பன் தெரு சந்திப்பில், சாலையின் தரைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயின் சிமென்ட் தளம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், லிங்கப்பன் தெருவில் இருந்து ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவிற்கு வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி இரவு நேரத்தில், நடந்து செல்லும் பாதசாரிகளும் உடைந்த நிலையில் உள்ள மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, உடைந்த நிலையில் உள்ள கால்வாய் தளத்தின் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.