உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கலப்பை கண்டறிய முடியாமல் காஞ்சிபுரம் மாநகராட்சி திணறல்

கழிவுநீர் கலப்பை கண்டறிய முடியாமல் காஞ்சிபுரம் மாநகராட்சி திணறல்

காஞ்சிபுரம்: குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை கண்டறிய முடியாததால், 'வீட்டு இணைப்பில் தரப்படும் குடிநீரை குடிக்காதீங்க...' என, பொதுமக்களிடம், காஞ்சி மாநகராட்சி அதிகாரிகள், கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை தொடர்கிறது. குறிப்பாக, 6, 16, 23, 30, 33, 35 ஆகிய ஆறு வார்டுகளிலும் இந்த பிரச்னை பெரிதாக உள்ளது. கடந்த 6ம் தேதி நடந்த கூட்டத்திலும், கவுன்சிலர்கள் பலர் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை அதிகாரிகள் தீர்க்க கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர். குற்றச்சாட்டு அதிகரித்து, மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை கண்டறிந்து, தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல வார்டுகளில் , கழிவுநீர் கலக்கும் சில இடங்களை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்துவதால், பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், பாதிப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டு இணைப்புகளில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பருக வேண்டாம் என, அதிகாரிகள் கெஞ்சாத குறையாக, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடிநீருடன் கழிவுநீர் க லக்கும் இடங்களை ஆராய்ந்து தடுத்துள்ளோம். இதற்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறது. சில இடங்களில் கழிவுநீர் கலக்கும் பகுதியை கண்டறிய முடியவில்லை; தொடர்ந்து முயற்சிக்கிறோம். கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை, அருந்த வேண்டாம் என, வீடுதோறும் தெரிவித்து வருகிறோம். விரைவில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ