உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் கடந்த 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், 13.3 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 19,000 பேர் முதல்முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.இது ஒருபுறம் இருக்க, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 40 -- 49 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள், 3.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன்மூலம் வரக்கூடிய லோக்சபா தேர்தலில், 40 -- 49 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அரசியல் கட்சியினருக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயது வாரியாக உள்ள வாக்காளர்கள் விபரம்

18 - 19 19,06320 - 29 2,23,47530 - 39 2,96,20340 - 49 3,22,98150 - 59 22,413760 - 69 1,41,75270 - 79 75,51780+ 30,419மொத்தம் 13,33,547


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை