காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் யானை வாகனத்தில் உலா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் விழாவில் காலை பவழக்கால் சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்தில் கச்சபேஸ்வரர் வீதியுலா வந்தார்.ஆறாம் நாள் விழாவான நேற்று இரவு யானை வாகனத்தில் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதியிலும் வந்தார்.ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் விழா வரும் 13ம் தேதி இரவு வெள்ளி ரதமும், 12ம் நாள் விழா வரும் 15ம் தேதி பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 18 ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.