உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி புகார் பெட்டி பகுதி

 காஞ்சி புகார் பெட்டி பகுதி

கா ஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகர் வரையுள்ள தார்சாலையில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலை அமைத்தபோது, ஏற்கனவே போடப்பட்டிருந்த பழைய சாலையை முழுமையாக அகற்றவில்லை. பெயரளவிற்கு பழைய சாலையை அகற்றியுள்ளனர். இதனால், பல இடங்களில், சாலையோரத்தில் ஏற்கனவே இருந்த பழைய சாலையை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, உயரமாக தார் சாலை அமைக்கப்பட்ட பகுதியில் சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.நீலகண்ட சொக்கு, காஞ்சிபுரம்.உயரமான தார் சாலை அமைப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி