உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் காமகோட்டி அம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கார்த்திகை சோமவார பெருவிழா இன்று நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு, காமகோட்டி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில், எழுந்தருளும் கைலாசநாதர் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர் குழுவினர், நால்வர் நற்பமணி மன்றத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ