கார்த்திகை சோமவார அபிஷேகம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடந்து வருகிறது.அதன்படி நடப்பாண்டு கார்த்திகை சோமவாரமான நேற்று கோவிலில் உள்ள அனைத்து விக்ரஹங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை கோவில் ஸ்தானிகர்கள், பணியாளர்கள், அறங்காவலர்கள், பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர்கள், காஞ்சிபுரம் திருவேகம்பநாதர் திருக்கோவில் கார்த்திகை முதற்சோமவார வழிபாட்டு குழு அறக்கட்டளையினர் இணைந்து செய்திருந்தனர்.