உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டி கிடக்கும் கேதாரீஸ்வரர் கோவில் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவிப்பு

பூட்டி கிடக்கும் கேதாரீஸ்வரர் கோவில் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவிப்பு

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் உள்ள காஞ்சிபுரம் சாலையில், மரகதாம்பிகை உடனுறை கேதாரீஸ்வரர் கோவில் உள்ளது.ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிரதோஷம், கேதாரகவுரி விரதம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.இந்த கோவிலில்எப்போதும் ஒரு காலபூஜை மட்டுமே நடந்து வருகிறது. பூஜையை தவிர்த்து, மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே உள்ளது.இதனால், இக்கோவிலுக்கு வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வரும்போது, சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், பக்தர்கள் கோவில் திறக்கும் நேரம் குறித்து தெரிந்து கொள்ள, எந்தவித தகவல்பலகையும் கோவில் நுழைவாயிலில் இல்லை. எனவே, கேதாரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திறக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:இந்த கோவிலில்,ஒரு கால பூஜைமட்டுமே நடக்கிறது.இதனால், மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே உள்ளது.எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய, காலை மற்றும் மாலை நேரங்களில், கோவிலை திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி