மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையங்களில் ஆபத்து... உதிரும் கட்டடம்!
29-Aug-2024
கடத்தல் கும்பலின் ஆட்சி: அன்புமணி கண்டனம்
16-Sep-2024
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, காந்தி தெருவில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால், அங்கன்வாடி மைய வளாகத்தில் பார்த்தீனியம் செடிகள் புதர்போல மண்டியுள்ளது.இச்செடிகளால், மனிதர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கொப்புளம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படும் என கூறப்படுகிறது.இந்நிலையில், அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.அதேபோல, கால்நடைகள் இச்செடியை உண்டால், குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.எனவே, களக்காட்டூர் அங்கன்வாடி மைய வளாகத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
29-Aug-2024
16-Sep-2024