மேலும் செய்திகள்
வாலிபரை வெட்டியவர் கைது
29-Jan-2025
ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அருகே, ஆசா நகரை சேர்ந்தவர் மோகித்ராஜ், 30, உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஒரகடம் அருகே, எறையூர் கிராமத்திற்கு சென்றார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிலர், மது போதையில் மோகித்ராஜிடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.இதை தடுத்த மோகித்தின் உறவினரான ஜெகதீசன் என்பவருக்கும் இடது காதில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு, மோகித்ராஜிற்கு தலை மற்றும் முகத்தில் 13 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் படி, ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எறையூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ், 44 என்பரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமார், சரத்குமார் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
29-Jan-2025