நாயகன்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
நாயகன்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, நாயகன்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து வேணுகோபால சுவாமி குழந்தை வடிவமாக தொட்டிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை உறியடி திருவிழா நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 9:00 மணி அளவிற்கு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, உறியடிக்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.