நவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர், நவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, மேட்டுத் தெருவில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில், கடந்த மாதம் புனரமைப்பு பணிகள் முடிந்தன. கடந்த 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு, கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.