மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
12-May-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள செவ்வந்தீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிதாக வல்லப கணபதி, வாயு பகவான், சிவதுர்க்கை, கால பைரவர் உள்ளிட்ட சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 3ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று, காலை 7:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலச புறப்பாடும், தொடர்ந்து, கோவில் கோபுர கலசத்திற்கும், விநாயகர், சிவதுர்க்கை, வாயு பகவான், அங்காரகன், கால பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மஹா தீபாராதனையும், மஹா அபிஷேகமும் நடந்தது.
12-May-2025