உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள கள்ளக்குறத்தி அம்மன் மற்றும் எல்லம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுாரில் ஆனைப்பள்ளம் செல்லும் சாலையில், கள்ளக்குறத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கிராமத்தின் கிராம தேவதையாக கள்ளக் குறத்தி அம்மன் விளங்கி வருகிறது. இக்கோவிலின் சார்பில், 20 ஆண்டுக்கு முன், கிராம எல்லையில் பொதுமக்களை வரவேற்கும் விதமாக, நுழைவாயில் அமைக்கப்பட்டது. தற்போது, நுழைவாயிலில் கள்ளக்குறத்தி அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடந்த மாதம் புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயிலுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு கோவிலின் மூலவர் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட கலசநீர், கள்ளக்குறத்தி அம்மன், விநாயகர் சிலைகள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. அதேபோல, காக்க நல்லுாரில் முருக்கேரி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட, எல்லம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இங்கு, காலை 10:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட கலசநீரை கோவிலுக்குள் எடுத்துச் சென்று, மூலவர் அம்மன் சிலை மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ