உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொள்ளாழி கோவிலில் கும்பாபிஷேக விழா

தொள்ளாழி கோவிலில் கும்பாபிஷேக விழா

வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றித்திற்கு உட்பட்டது தொள்ளாழி கிராமம். இப்பகுதியில், சிறய அளவிலான கொட்டகை அமைத்து, அதில் அங்காள பரமேஸ்வரி அம்மனை அப்பகுதியினர் வழிபட்டு வந்தனர்.இக்கோவிலை புதியதாக வடிவமமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, மூன்று ஆண்டு களாக புதிய கோவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேக பெருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, பிரதிஷ்டை விழாவும், நேற்று அதிகாலை கலச புறப்பாட்டை தொடர்ந்து, கருவறை அம்மன் சிலை மீது, புனிதநீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், அப்பகுதியினர் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ