உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறம்வளத்தீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

அறம்வளத்தீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபத்தில் இருந்து, வந்தவாசி சாலை, கலெக்டர் அலுவலகம்செல்லும் வழியில் உள்ள அறம்வளத்தீஸ்வரர் கோவிலில், 52 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழு, கும்பாபிஷேக விழா குழு, செங்குந்த மரபினர், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி ராஜகோபுரம்நிர்மானிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 25ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்டவையுடன் யாகசாலை பூஜை துவங்கி, மாலை முதல் கால யாகபூஜை நடக்கிறது.வரும், 27ல், காலை 9:00 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், மகாசங்கல்படம், கலச புறப்பாடு நடக்கிறது. 9:30 மணிக்கு ராஜகோபுரம், விமானத்திற்கும், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண விசேஷ தரிசனமும், தொடர்ந்து சுவாமி புறப்பாடும் நடக்கிறது.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை திருப்பணி குழு, கும்பாபிஷேக விழா குழு, செங்குந்தர் மரபினர், கோவில் செயலர்அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ