உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தும்பவனத்து அம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

தும்பவனத்து அம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தும்பவனத்து அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவை ஒட்டியள்ள தும்பவனம் தெருவில், தும்பவனத்து அம்மன், முத்து மாரியம்மன், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று, காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூ-ஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, ஹோமம் உள்ளிட்டவையும், காலை 9:45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10:45 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுரம் பரிவார தேவதைகளுக்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.. மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !