மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம்கிராமத்தில், புதிதாகஏகாத்தம்மன், பொன்னி யம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.இந்த மூன்று கோவில்களில் கும்பாபிஷேக விழா,நேற்று, கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று, யாக சாலை பிரவேசமும்,மஹா சங்கல்பம் நடை பெற உள்ளன.நாளை காலை 6:00 மணிக்கு நான்காம் காலபூஜையும், அதை தொடர்ந்து, காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.