மேலும் செய்திகள்
அழிசூர் அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
20-Oct-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை மாற்றி அமைக்க அப்பகுதிவாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, கிராமவாசிகள் ஒன்றிணைந்து, நன்கொடை வாயிலாக கோவிலை விரிவுபடுத்தி மண்டபத்துடன் கூடிய கோபுரம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.கோவில் திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று காலை மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை இரண்டாவது கால யாக பூஜைகளை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
20-Oct-2024