உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் நகராட்சி பகுதி சபை கூட்டம்

குன்றத்துார் நகராட்சி பகுதி சபை கூட்டம்

குன்றத்துார், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவதைப் போல், நகராட்சியில் பகுதி சபை கூட்டம் நடத்தப்படுகிறது. குன்றத்துார் நகராட்சி மேத்தா நகரில், நேற்று 'பகுதி சபை' கூட்டம் நடந்தது.குன்றத்துார் நகரசபை தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.குடியிருப்பு நலச்சங்கத்தினர், பொதுமக்கள் பங்கேற்று, சாலை விரிவாக்கம், புதிய சாலை அமைத்தல், கூடுதல் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட குறைகளை தெரிவித்து மனு வழங்கினர்.நகராட்சி கமிஷனர் கவின்மொழி, பொறியாளர் உஷாராணி, நகரசபை உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி