மேலும் செய்திகள்
காஞ்சி புகார் பெட்டி
17-Sep-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் இருந்து, வாடாதவூர், மருதம் வழியாக உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரத்திற்கும், குண்ணவாக்கம் கூட்டுச்சாலை வழியாக சாலவாக்கத்திற்கும் சாலை உள்ளது.இச்சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குண்ணவாக்கம் பஸ் நிறுத்தத்தில், இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்கூடை வசதி ஏற்படுத்த, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17-Sep-2024