மேலும் செய்திகள்
ஏரிநீர் பாசன கால்வாயில் குப்பை கொட்டும் அவலம்
05-May-2025
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர் பாசன சங்க தலைவராக தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தியில் கால்வாய் துார்வார வேண்டும் என, மனு அளித்துள்ளார்.இதுகுறித்து, வில்லிவலம் ஏரி நீர் பாசன தலைவர் தேவி அளித்த மனுவில் கூறியதாவது:நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வில்லிவலம் ஏரி துார்வார வேண்டும். மேலும், பாசன கால்வாய்கள் துார் வாராமல், பல ஆண்டுகளாக கால்வாய் துார்ந்துள்ளது. பாசனத்திற்கு ஏற்ப துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
05-May-2025