உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா

ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், நான்காவது சோமவார தினத்தன்று லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, நான்காவது கார்த்திகை சோம வாரமான நாளை மாலை, லட்சதீப திருவிழா நடைபெறுகிறது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் பிரகாரத்தில் சிவலிங்கம், நட்சத்திரம், ஓம், ஸ்வஸ்திக் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு, அதில் அகல்விளக்கில் தீபம் ஏற்ற உள்ளனர்.லட்சதீப திருவிழாவையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடைபெற உள்ளது என, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை