மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது
07-Sep-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், கோ- -ஆப்டெக்ஸ் வேலுார் மண்டலத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன.காஞ்சிபுரம், காந்தி ரோட்டில் இயங்கும் கோ -- -ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.இந்தாண்டு, வேலுார் மண்டலத்தில் கடந்தாண்டு தீபாவளி விற்பனையின்போது, 7.08 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு, தீபாவளிக்கு மட்டும் 8.50 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கோ -- ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில், கடந்தாண்டு 73 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1.15 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்து விற்பனை துவக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பட்டு சேலை, வேட்டி, ரெடிமேட், காட்டன் சேலைகள் உள்ளிட்ட துணி வகைகள் தீபாவளி விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
07-Sep-2024