மேலும் செய்திகள்
தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
29-Jan-2025
காஞ்சிபுரம், மஹாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் 'உலகதொழுநோய்' தினமாக அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 வரை, இரு வார கால ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறஉள்ளது.அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும்குன்றத்துார் ஆகிய நான்கு ஒன்றியங்களில் தொழுநோய் கண்டறிதல் முகாம், பிப்ரவரி 13 - 28ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று சுகாதார கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.பள்ளி மாணவ - மாணவியரை தொழுநோய் பரிசோதனை செய்ய உள்ளனர். இம்முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்க, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.தொடர்ந்து, தொழுநோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது.மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (தொழுநோய்) கனிமொழி, இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
29-Jan-2025