மேலும் செய்திகள்
நெமிலி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
3 minutes ago
உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்
11 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சார்பில், தமிழ் சான்றோர்கள் 39 பேருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம், சிதம்பர நாத ஞான பிரகாஷ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் 4வது ஆண்டு விழா, திருமுறை பெருவிழா, தமிழ் சான்றோர்கள் 39 பேருக்கு விருது வழங்கும் விழா, மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தருமை ஆதீனம் புலவர் மஹா வித்வான் அருணை வடிவேல் முதலியார் தமிழ் அரங்கை காஞ்சிபுரம் சிவனடியார் திருக்கூட்ட தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் திறந்து வைத்தார். புலவர் சரவண சதாசிவம், சங்கரன், உமேஷ், பேராசிரியர் அமுத இளவழகன் ,சிவனடியார் திருக்கூட்ட துணை தலைவர் ஈசான ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற பொதுச் செயலர் குப்புசாமி வரவேற்றார். விழாவில் சண்முக சுந்தர தேசிகர், சாமி நாத தேசிகர், கதிர்வேல் சுப்பிரமணி ஓதுவார் எம்.எஸ்.பூவேந்தன், மகாதேவன், சிவ சண்முகசுந்தரம் உள்ளிட்ட மொத்தம் 39 தமிழ் சான்றோர்களுக்கு தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சார்பில் வாழ் நாள் சாதனையாளர் விருதை காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம், சிதம்பர நாத ஞான பிரகாஷ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக, காஞ்சிபுரம் கோவில்களில் பணிபுரியும் ஓதுவார்கள் ஆடலரசு, செல்வக்குமார், தமிழ்ச்செல்வன், லோகநாதன், அருண்குமார், நமச்சிவாயம் ஆகியோருக்கு தலா 1,000 ரூபாயும், தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
3 minutes ago
11 minutes ago