உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் ஒயரில் லாரி உரசி டிரைவர் பலி

மின் ஒயரில் லாரி உரசி டிரைவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்,:மின் ஒயரில் லாரி உரசியபோது, அருகில் நின்றிருந்த டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், கனிசேலாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 30. திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.எஸ்., டிரான்ஸ்போர்டில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.நேற்று காலை, மணிமங்கலத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி லாரியில் சென்றார். அப்போது, தான் பணிபுரியும் டிரான்ஸ்போர்டிற்கு சொந்தமான லாரி ஒன்று, நாவலுார் அருகே, பஞ்சர் ஆனதை அடுத்து, அங்கு டிரைவர் தியாகராஜன் சென்றார்.பஞ்சரான டயரை கழற்றி, லாரியில் ஏற்றிய போது, அருகில் உள்ள மின் ஒயரில் லாரி உரசியது. இதில் லாரியில் அருகே நின்றுருந்த தியாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி