உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் பிரசித்தி பெற்ற 19ம் நுாற்றாண்டை சேர்ந்த அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து, கோவிலை புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர்.அதன்படி, பழுதடைந்த கோவிலை பாலாலயம் நிகழ்ச்சிக்கு பின், முழுதும் இடித்துவிட்டு, அதே வடிவிலான மண்டபம் மற்றும் விமான கோபுரத்துடன் புதிதாக கோவில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.திருப்பணி முழுமை பெற்றதையடுத்து, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை மங்கல இசையுடன் துவங்கி, கணபதி ஹோமம் உள்ளிட்ட முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 9:00 - 10:30 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ