மேலும் செய்திகள்
வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
09-Jun-2025
உத்திரமேரூர், உச்சிகொல்லைமேடு கெங்கையம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நேற்று நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், உச்சிகொல்லைமேடு கிராமத்தில் கெங்கையம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர்.அதன்படி, இக்கோவில்களில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று, காலை 9:30 மணிக்கு யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட நீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
09-Jun-2025