உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஹா ஸ்வாமிகள் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை

மஹா ஸ்வாமிகள் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது மடாதிபதி மஹா ஸ்வாமிகள் என, அழைக்கப்படும் சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவத்தையொட்டி, காஞ்சிபுரம் தேனம்பாக்கம், சிவாஸ்தானத்தில் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.முதல் நாள் தெப்போற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மற்றும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்தனர். தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தெப்போற்சவம், இன்றும், நாளையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !