உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத விழா துவக்கம்

திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத விழா துவக்கம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி தினமும் மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம் பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார். முதல் நாளான நேற்று விநாயகர் வணக்கமும், உதங்கர் சரிதமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.வரும் 18 ம் தேதி முதல், 30ம் தேதி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடக்கிறது. ஏப்., 27 ம் தேதி அரவான் களபலியும், 29ம் தேதி, வேகவதி நதிக்கரையில் காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 30ம் தேதி தருமர் பட்டாபிேஷகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை