உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பு இல்லாத பொது கழிப்பறை

பராமரிப்பு இல்லாத பொது கழிப்பறை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 11வது வார்டுக்குட்பட்ட பூதேரிப்பண்டை பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பேரூராட்சி சார்பில், பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. கழிப்பறையை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையில் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது. மேலும், கழிப்பறையை கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் படர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால், அப்பகுதியினர் கழிப்பறையை உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பொது கழிப்பறை, போதிய பராமரிப்பு இல்லாமல் பயன்பாடின்றி, கட்டடம் வீணாகி வருகிறது.எனவே, பராமரிப்பின்றி உள்ள பொது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ