உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, படூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ், 23. இவர், கடந்த 8ல் மலையாங்குளத்திற்கு பைக்கில் சென்றார். அப்போது, படூர் அரசு மருத்துவனை அருகே செல்லும்போது, 'ஏன் வேகமாக செல்கிறாய்' என கூறி, ஐந்து பேர் கும்பல் அவரை மறித்து தாக்கினர். காயமடைந்த விக்னேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் மலையாங்குளத்தை சேர்ந்த ஆனஸ்ட் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ