கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
உத்திரமேரூர்:-நீர்குன்றத்தில் கன்னியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை, சாலவாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, நீர்குன்றம் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 12ல் ஆனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 40, என்பவர், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். இதை அறிந்த கோவில் பூசாரி குமார், 50, என்பவர், சுரேஷ் பேரில் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இ தையடுத்து, போ லீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை தேடி வந்தனர். இந்நிலையில், சாலவாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த சுரேஷை நேற்று கைது செய்தனர். பின், அவரிடமிருந்து 4,600 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.