கத்தியை முனையில் பணம் பறித்தவர் கைது
உத்திரமேரூர்,உத்திரமேரூர் தாலுகா, இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 30.; இவர், நேற்று முன்தினம், சாலவாக்கம் பகுதியில் உள்ள இரும்பு கடைக்கு சென்று, அதன் உரிமையாளரான திருமுருகன், 50, என்பவரிடம், பணம் கேட்டுள்ளார்.அதற்கு இரும்புக்கடை உரிமையாளர் பணம் தர முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து, கதிர்வேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, திருமுருகனிடம் இருந்து, 300 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.இது குறித்து, திருமுருகன் சாலவாக்கம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் கதிர்வேலை நேற்று கைது செய்தனர்.