படிக்கட்டில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
உத்திரமேரூர்:சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அரும்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 56. இவர், கடந்த 12-ம் தேதி மாலை 7:00 மணிக்கு, தன் வீட்டின் படிக்கட்டில் ஏறும்போது, தவறி விழுந்து தலையில் காயமடைந்தார்.பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.