உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேரளாவில் தேடப்பட்ட நபர் சென்னை ஏர்போர்ட்டில் கைது

கேரளாவில் தேடப்பட்ட நபர் சென்னை ஏர்போர்ட்டில் கைது

சென்னை,கேரள மாநிலம், மலப்புரம் திருரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பஷீர், 53. இவர் மீது, திருரங்காடி காவல் நிலையத்தில், 2014ல் நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகின. போலீசார் தேடிய நிலையில், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரமான சார்ஜாவுக்கு தப்பினார். இதையடுத்து, அப்துல் பஷீர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, கேரள போலீசாரால் அறிவிக்கப்பட்டார். இது குறித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சார்ஜாவில் இருந்து 'ஏர் அரேபியன்' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின் பாஸ்போர்ட் விபரங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தலைமறைவு குற்றவாளியான அப்துல் பஷீரும் வந்திருந்தார். அவர் பாஸ்போர்ட்டை 'ஸ்கேன்' செய்தபோது, அவர் தேடப்படும் குற்றவாளி என்பது குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிந்தது. அவர்கள் அளித்த தகவலையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் அவரை கைது செய்து, கேரள போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கேரளாவில் இருந்து வந்த போலீசார், அப்துல் பஷீரை கைது செய்து, விசாரிக்க அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ