உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.6,000 லஞ்சம் வாங்கிய மணலி மண்டல அதிகாரி கைது

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய மணலி மண்டல அதிகாரி கைது

சென்னை:சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னை மணலி புதுநகர், சடையன்குப்பம், வடிவுடையம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தன் பெயரில் ஒரு வீட்டு மனையையும், அண்ணனின் பெயரில் ஒரு வீட்டு மனையையும் வாங்கி உள்ளார். இந்த இடங்களுக்கு சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய, சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தின் உதவி வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இதை பரிசீலனை செய்து, பெயர் மாற்றம் செய்து தர சொத்து வரி மதிப்பீட்டாளர் பாஸ்கர், தனக்கு 6,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணலி மண்டல உதவி வருவாய் அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்தனர்.சீனிவாசனிடம் இருந்து நேற்று பாஸ்கர் லஞ்சமாக 6,000 ரூபாயை வாங்கியபோது, கையும் களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை