மேலும் செய்திகள்
சாலையோரம் மண் அரிப்பு குண்ணவாக்கத்தில் அபாயம்
05-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பள்ளியின் நுழைவாயில் முன் செல்லும் மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்து இருந்தது.இதை, பேரூராட்சி நிர்வாகம் ஒரு வாரத்திற்கு முன் அகற்றி, வடிகால்வாயை சீரமைக்கும் பணியை மேற்கொண்டது. அப்போது, வடிகால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் இருந்து அள்ளிய மண், பள்ளி நுழைவாயிலில் கொட்டப்பட்டது.தற்போது, வடிகால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டும், மண் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், பள்ளிக்கு வந்து செல்லும்போது இடையூறு ஏற்படுகிறது. எனவே, பள்ளி நுழைவாயிலில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Jan-2025