உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழையசீவரம் அம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

பழையசீவரம் அம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மன்னேரிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த செப்., 15ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதைத் தொடர்ந்து, தினமும் 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவையொட்டி, கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் சிவாச்சாரியார்கள் தலைமையில் ஹோமம் வளர்த்து, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், 108 சங்குகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ