மேலும் செய்திகள்
276 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
26-Sep-2024
காஞ்சிபுரம், :துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம், அவளூர், ஆசூர், கம்பராஜபுரம், காலுார், இளையனார்வேலுார் உள்ளிட்ட 16 ஊராட்சிகளைச் சேர்ந்த துாய்மை காவலர்கள், பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆப்பரேட்டர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், வேடல் கிராமத்தில் நேற்று நடந்தது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியா, கோமளா முன்னிலை வகித்தனர்.இதில், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி தலைமையில், திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல், தோல், இ.சி.ஜி., எக்ஸ்ரே, வாய் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.இதில், 165 ஆண்கள், 121 பெண்கள் என, துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆப்பரேட்டர்கள் மொத்தம் 286 ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.இதில், கண்புரை அறுவை சிகிச்சைக்கு 8 பேரும், உயர் ரத்த அழுத்தம் 6 பேரும், அதிக சர்க்கரை 4 பேரும், மூட்டு வலிக்கு 3 பேர், என, மொத்தம் 21 பேர் மேல் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.முகாமிற்கான ஏற்பாட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார்.
26-Sep-2024