உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்

சாலையோரம் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள மாந்தோப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலை சந்திப்பில், மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கியது.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி நிர்வாகத்தினர், மாந்தோப்பு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டி, கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தனர். ஆனால், பள்ளம் சரிசெய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இரவு நேரத்தில், இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும் போது, நிலை தடுமாறி விழுந்து காயம்அடைந்து வருகின்றனர்.எனவே, மாந்தோப்பு செல்லும் பிரதான சாலையில், உள்ள பள்ளத்தை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை