மேலும் செய்திகள்
மண் சாலையாக மாறிய தரைப்பாலம்
17-Sep-2024
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில், மிளகர்மேனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில், சாலையின் குறுக்கே, விவசாய நிலங்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் வெளியேறும் வகையில், தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தரைப்பாலத்தின் நடுப்பகுதி, 2 ஆண்டுகளுக்கு முன் சேதமாகி ஓட்டையாக இருந்தது. அந்த தரைபாலம் சீரமைப்பு பணி அப்போது மேற்கொள்ளப்பட்டது. சீர் செய்த பகுதி தற்போது மீண்டும் சேதமாகி வருகிறது.எனவே, இந்த தரைப்பாலத்தில் சேதமான பகுதியை சீரமைக்க வேண்டும் என, மிளகர்மேனி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Sep-2024