உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாமல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர்

தாமல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி, 611 ஏக்கர் பரப்பளவு உடையது. மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று. 206 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.இதில், 10 மதகுகள், 3 கலங்கல்கள் உள்ளன. இந்த ஏரி வாயிலாக, 2,319 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு, 250 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரி முழுதும் நிரம்பியுள்ளதால், சில நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்றைய நிலவரப்படி, ஏரிக்கு வரும் 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேறுவதை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டார்.ஏரி குறித்த விபரங்களை அதிகாரிகள் விளக்கினர். இந்த ஆய்வின்போது, கலெக்டர்கலைச்செல்வி, தி.மு.க., - எம்.பி., செல்வம்,தி.மு.க., - எம் எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன்உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை