உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு

கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, செவிலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 29; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணி அளவில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ஏனாத்துார் தனியார் பள்ளி அருகே, கோனேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், 28, என்பவர், பிரகாஷ் என்பவரிடம் கத்தி முனையில், 1,600 ரூபாய் மிரட்டி பறித்து சென்றுள்ளார்.இதுகுறித்து, பிரகாஷ் அளித்த புகாரின்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஒரு கொலை வழக்கு உட்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி