மேலும் செய்திகள்
குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
07-Oct-2025
உத்திரமேரூர்: -நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, அமராவதிபட்டணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். உத்திரமேரூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட அமராவதிபட்டணம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கூடத் தெரு, மாரியம்மன் கோவில் தெருக்களில், குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. இங்குள்ள, குடியிருப்புகளில் குரங்குகள் நுழைந்து உணவு பொருட்களை எடுத்துச் சென்றும், தோட்டங்களில் வளர்த்து வரும் காய், கனி தரக்கூடிய மரங்களை சேதப்படுத்தியும் வந்தன. மேலும், தெருக்களில் நடந்து செல்லும் சிறுவர், முதியோரை குரங்குகள் அச்சுறுத்தி பொருட்களை பிடுங்கி சென்றன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து, உத்திரமேரூர் வனத்துறையினர், குரங்குகளை பிடிக்க அமராவதிபட்டணத்தில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். அதில் 25 குரங்குகள் நேற்று சிக்கின. பின், குரங்குகளை அருகிலுள்ள எடமிச்சி காப்பு காட்டில் வனத்துறையினர் விட்டனர்.
07-Oct-2025