உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் கொசு மருந்து புகை அடிப்பு

காஞ்சியில் கொசு மருந்து புகை அடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில், கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சுழற்சி முறையில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில், 1,060 தெருக்கள் உள்ளன. சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதியிலும், துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்களிலும் தேங்கிய மழைநீரால் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள உப்பேரிகுளம், பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை, திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார பிரிவினர், சுழற்சி முறையில், வார்டு வாரியாக கொசு மருந்து புகை அடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை